Monday, May 3, 2010

நான் யார் ?
மனிதனாக, இந்த மண்ணில், இவ்வீட்டில், இக்குடும்பத்தில் இன்னார் மகனாக பிறந்தது ஏன் ? எப்படி? பெற்றோர் சூட்டிய பெயர், பிராமணன் எனும் முத்திரை , அவர்கள் உணவுடன் ஊற்றிய அன்பு, இளமையில் நான் பார்த்த சில நிகழ்வுகள், மழலையில் நான்
கேட்ட சொற்கள், கருத்துக்கள், இவையால் உருவான நினைவுகள், இவை அனைத்தையும் உள்வாங்கி கொண்டு என் கருத்துகளை கொண்டுள்ள,சுய
சிந்தனையற்ற இயந்திரமா நான்?
இன்னார் உறவினர் , இன்னார் நண்பர் இன்னார் நல்லவர் இன்னார் தீமையின் உறு என்று 'நான்' யாரென்றே அறியாத நான், எப்படி தீர்மானிக்க முடிகிறது? குறுடநின் வரைபடம் போல் சிதறிகிடக்கும் எண்ணற்ற எண்ணங்கள், சிந்தனைகள்...
நான் என நான் நினைத்திருக்கும், இருள் சூழ்ந்த, ஐந்து பூதங்களுக்கும் அடிமையான, பொருள் குவிக்கும் பொருள் அற்ற வாழ்வின் கைதியான நிழல் உருவம்
நான் அல்லவே..
நான் யார்?
நன்மை தீமை எனும் பாகுபாட்டை கடந்த ஆத்மா அல்லவோ நான்...
பசி,தாகம், துயர், வெறுப்பு ,ஆணவம்..நான் எனும் எண்ணம் கடந்த,அன்பில் உருவான அரனை உட்கொண்டவன் அல்லவோ நான்..
எதிரிகள் இல்லை ..நண்பர்கள் இல்லை..
ஆனந்தம் இல்லை.. துயர் இல்லை.. பாகுபாடின்றி அன்பளிக்க உருவெடுத்த கடவுளின் குழந்தை அல்லவோ நான் ?
இவை அனைத்தும் வார்த்தையில் பதிவு செய்த நான்.. வாழ்க்கையில் பதிவு செய்யும் நாள் எப்போது ??

4 comments:

Murli Bhai said...

wunnerful words of expression..

Lovely... cheers and move ahead...

Unknown said...

Ram Krishna Hari

Bala said...

Amazing is the word..

Neon Red said...

Arumayaana karuththu...
Ennangalin velippaadu arpudam!